அரசமைப்பின் 13 சட்டத்துக்கு அப்பால் செல்லக்கூடிய அதிகாரப் பகிர்வையே வடக்கு-கிழக்கு மக்கள் கோருகின்றனர்-- ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லக்கூடிய அதிகாரப் பகிர்வையே வடக்கு-கிழக்கு மக்கள் கோருகின்றனர் எனவும், எனவே, அதனை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பண்டார இவ்வாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக் கையில்-
வடக்கு தொடர்பிலும், தமிழ் மக்கள் தொடர்பிலும் ஆளுங்கட்சி சாதகமாக கதைத்து வருகின்றது. இது நல்ல விடயம்.
அதேபோல யாழ். பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவும் வரவேற்ககூடிய விடயம். ஆனால் இதைவிடவும் வேறொரு விடயத்தையே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசமைப்பு மறுசீரமைப்பு, 13 இற்கு அப்பால் சென்ற அதிகாரப் பகிர்வு என்பன தொடர்பில் அம்மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.
இந்த பாதீட்டில் இதற்குரிய தீர்மானம் எடுக்கப்பட்டதா? இதற்குரிய அடித்தளம் இடப்பட்டுள்ளதா?
கலந்துரையாடல் இடம்பெற்றதா?
வடக்கு, கிழக்கு மக்கள் நூலகத்தை கேட்கவில்லை, அதிகாரப் பகிர்வையும், தமது உரிமைகளை பாதுகாக்கக் கூடியவாறான வேலைத்திட்டம் ஒன்றையுமே எதிர்பார்க்கின்றனர்.
அதற்கு தேவையான நடவடிக்கையை எடுங்கள்-என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
