சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் இந்தியாவில் தரையிறங்கியது.

சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் நேற்று சனிக்கிழமை இரவு தரையிறங்கியது.
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் இரண்டாவது தொகுதி இதுவாகும்.
சி-17 விமானம் அமிர்தசரஸில் இரவு 11.35 மணியளவில் எதிர்பார்த்த நேரத்திற்கு 90 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கியது என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
116 நாடுகடத்தப்பட்டவர்களின் பட்டியலின்படி, அவர்களில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் மற்றும் 30 இற்கும் மேற்பட்டவர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.
ஏனையவர்கள் குஜராத், உத்தரபிரதேசம், கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நாடு கடத்தப்பட்ட 157 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம் இன்று ஞாயிற்றுக்கிழமை அமிர்தசரஸில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் மேலும் 487 சட்டவிரோத இந்திய குடியேற்ற வாசிகளை அமெரிக்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என மத்திய அரசு அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த நாடு கடத்தல் வந்துள்ளது.
பெப்ரவரி 5 ஆம் திகதி, 104 சட்டவிரோத இந்தியக் குடியேற்றங்களுடன் அமெரிக்க விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
