ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பம்.
1 year ago

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்துமபண்டாரவின் பெயரும், கண்டி மாவட்ட எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயரும் தற்போது வரையில் முன்வைக் கப்பட்டுள்ளன.
சஜித் வெற்றி பெற்றால் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதமராக வேண்டும் என கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மற்றுமொரு குழு உறுப்பினர்கள் கிரியெல்லவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இதேவேளை, இவர்கள் இருவருக்குமிடையே தேவையற்ற போட்டி ஏற்பட்டால், இந்த பதவி மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





