வெளிநாடு அனுப்புவதாக பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் யாழ்.பொலிஸாரால் கைது!
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பல்வேறு நபர் களிடம் இருந்து சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்க லைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பெரும் மோசடி ஒன்று நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணொருவரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரை வழிநடத்தி மோசடிகளில் ஈடுபட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, முன்னதாக கைது செய்யப்பட்ட இளம் பெண், பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்ற சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பல்கலைக்கழக அலுவலரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
