2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது இலங்கையின் தேசிய ஒலிம்பிக்குழு, நிதி முறைகேட்டில் ஈடுபட்டது என்று எழுந்துள்ள குற்றசாட்டுகளை ஆராயுமாறு குற்றப்புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கின் போது பயண மற்றும் தங்குமிடச் செலவுகளுக்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் தலா 10 ஆயிரம் அமெரிக்க டொலரை ஏற்கனவே சர்வதேச ஒலிம்பிக் குழு வழங்கியிருந்தது.
எனினும் 10ஆயிரம் அமெரிக்க டொலருக்குச் சமமான இலங்கை ரூபாவை அவர்கள் வசூலித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் ஹேமசிறி பெர்னாண்டோ தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராகவும், மெக்ஸ்வெல் டி சில்வா பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
