கிளிநொச்சி பகுதியில் வயலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர் மண்ணில் புதையுண்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் காயம்

1 year ago

கிளிநொச்சி பகுதியில் வயலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர் மண்ணில் புதையுண்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் காயம்

கிளிநொச்சியில் மண்ணில் புதையுண்டிருந்த வெடிபொருளை இழுத்து எடுத்தபோது, அது வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

கிளிநொச்சி - பளை - அரசங்கேணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியமளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 19 வயது இளைஞரே படுகாயம டைந்தார்.

அந்தப் பகுதியில் தனக்கு சொந்தமான வயலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவரே இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்தார்.

இதில், படுகாயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின் றனர்.