


யாழ்.கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல அனுமதி
கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை ஆலயத்திறகு நிர்வாகத்தினரும் மக்களும் செல்லவுள்ள நிலையில் பொங்கல் வழிபாடுகளும் இடம்பெறவுள்ளது. தொடர்ந்தும் எதிர்வரும் வாரங்களிலும் வெள்ளிக் கிழமைகளில் வழிபாடுகளுக்கு மக்கள் செல்லமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நாளைய தினம் காலை 08மணிமுதல் மாலை 05மணி வரை ஆலயத்திற்கு செல்வதற்கும் சிரமதானப் பணிகளில் ஈடுடவும் அடியவர்களை கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
