





யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைக்கு தீர்வு வேண்டி வீதிக்கு வந்த மக்கள் ஜனநாயக வழியில் நேற்று இரவில் இருந்து இன்று மதியம் வரை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலையைச் சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்ட நிலையில், பதற்றமான சூழல் இடம்பெற்றது.
தற்போது கடமையில் இருக்கும் வைத்தியரை இடமாற்ற வேண்டாம் என்று கோரியும், வைத்தியசாலையை முறையாக இயங்க வைக்க நடவடிக்கையை மேற்கோள்ளுமாறும் கோரி பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலை தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் வைத்தியசாலை தொடர்பில் வைத்தியரின் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது.
வைத்தியரை இடமாற்ற முற்பட்ட போது மருத்துவருக்கு ஆதரவாக மக்கள் வீதிக்கு வந்தனர்.
இன்று மருத்துவர் பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு செல்கிறார். செல்லும் முன் மருத்துவர் மக்களுக்கு என்னை இந்த வைத்தியசாலையில் இருந்து இடமாற்றுவார்கள் ஆனால் இந்த தொழில் இருந்து விலகுவேன் என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
