இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஏறாவூர் பொலிஸாரால் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகியோரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள வீடு ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்ட போது அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணும் அவரின் சகோதரரான 51 வயதுடைய ஆணும் கடந்த ஜுன் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து இந்த பகுதில் தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
