காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய விசாரணைகள் இன்றும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

1 year ago


காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் இன்றும் (17) தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

இவ்விசாரணைகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாளை 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர் , நல்லூர், சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தோருக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

மேலும் இதில் அதிகளவான உறவுகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்