வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தால் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று போராட்டம்
7 months ago





வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலை வாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
