

சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்களை விஜயகலா மகேஸ்வரன் மிரட்டியதாக பொலிஸில் முறைப்பாடு.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசாரப் பணி களில் ஈடுபட்ட தன்னையும் ஆதரவாளர்களையும் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் சதாசிவம் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டோம். மதியம் மர நிழலில் உணவு அருந்துவதற்காக இளைப்பாறிய நிலையில் அவ் வழியாக காரில் வந்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தன்னுடன் வந்தவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரத் துண்டுகளை வழங்கினார்.
அப்போது நாங்கள் ஏன் இங்கு நிற்கிறோம் என்பது தொடர்பில் அவருக்கு தெரியப்படுத்திய நிலையில், கோபமடைந்த விஜயகலா எமது வேட்பாளரை கீழ்த்தரமாக பேசியதுடன் நான் வழங்கிய வேலை வாய்ப்பை அவர் நிறுத்தியதாக எம்முடன் முரண்பட்டார்.
அதுமட்டுமல்லாது என்னுடன் வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு தான் பெற்று தருவதாகவும் சஜித் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
இதன்போது ஒரு வேட்பாளரை ஆதரித்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயக உரிமை. அதனை நீங்கள் எங்களுக்கு கூறவேண்டிய தேவை இல்லை என நான் கூறினேன்.
அதன்பின் நான் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலமாக நடந்த விவரங்களை தெரிவித்த நிலை யில், கோபமடைந்த விஜயகலா சிங்கள மொழியில் என்னை தரக் குறைவாக பேசியதுடன் என்னை ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டு சென்றார்-என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
