முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு சொத்துக்கள் எவ்வாறு கிடைத்தன. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை

1 year ago



முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு சொத்துக்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசேட விசாரணை களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, முன்னாள் அமைச்சர்களான அனுபா பாஸ்குவல் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இது தவிர மகிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்பிலும் விசாரணைகள்                                 ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் விசாரணைகள்    தொடர்பான விவரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.