இந்தியா நாகபட்டினம் மற்றும் யாழ்.காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் ஆரம்பம்

31 நாகபட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை 40 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக அந்த சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டது.பிறகு மீண்டும் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சேவை நவம்பர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரை நிறுத்தம் செய்யப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் இதற்கான முன்பதிவு நத்தார் தினமான டிசெம்பர் 25 ஆம் திகதி முதல் தொடங்கியிருக்கிறது.
மேலும் வாரத்துக்கு ஆறு நாட்கள் இந்த சேவை கிடைக்கும் என்றும், ஒரு முறை சென்று வருவதற்கான போக்குவரத்துக் கட்டணம் இந்திய மதிப்பில் 35 ஆயிரம் ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
