இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் ஆளில்லா விமான மூலம் தாக்குதல்

1 year ago




இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் ஆளில்லா விமான மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, லெபனான் எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் 3 ஆளில்லா விமானங்கள் நுழைந்ததாகவும், அதில் 2 ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மற்றொரு ஆளில்லா விமானம் கட்டிட சுவற்றை தாக்கியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த சம்பவத்தின்போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் இல்லத்தில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

அண்மைய பதிவுகள்