யாழ்.சாவகச்சேரியில் நகைகள் மற்றும் டொலர்கள் திருடிய சந்தேகநபர் ஒருவரும் அந்த நகைகளை வாங்கிய சந்தேகநபரும் விளக்கமறியலில்

யாழ்.சாவகச்சேரி - மீசாலைப் பகுதியில் வீடு புகுந்து நகைகள் மற்றும் டொலர்கள் என்பனவற்றை திருடிய சந்தேகநபர் ஒருவரும் அந்த நகைகளை வாங்கிய சந்தேகநபரும் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மீசாலை கிழக்கு மற்றும் மீசாலை மேற்கு பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக ஒருவர் வீடுகளுக்குள் நுழைவதும், மக்கள் துரத்தும் போது ஓடுவதும் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில், மீசாலை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் தனியாக வசித்து வந்த வீட்டில் ஒரு சங்கிலி, ஒரு சோடி காப்பு மற்றும் இரண்டு மோதிரங்கள் என எட்டுப் பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை டொலர் என்பன திருடப்பட்டன.
இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இருவரை கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவர்களை 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
