மாத்தறை, கொட்டகொடவில் 9 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

10 months ago



மாத்தறை, கொட்டகொட பிரதேசத்தில் ஒன்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியில் பயணித்த 2 முச்சக்கரவண்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், பஸ் மற்றும் உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய பதிவுகள்