இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நான்கு பேர் இன்ரர்போல் பொலிஸாரால் கைது

இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்த நான்கு பேரை இன்ரர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் கைது செய்துள்ளது.
அவர்கள் டுபாய் உள்ளிட்ட 4 நாடுகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் பெயர்களை வெளியிடாமல் இருக்க பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியலை சர்வதேச பொலிஸாரிடம் சமர்ப்பிக்க பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் வர்த்தகரும் திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினருமான ஜனித் மதுஷங்க அண்மையில் இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து அவர் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்த நீதவான், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் குறித்த உத்தரவைப் புறக்கணித்து நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளதுடன், அவர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
