புகையிரதத்தில் தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுந்துள்ளார்.
1 year ago

புகையிரதத்தில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் (07) பிற்பகல் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுவதை அவரது நண்பி தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
நண்பி கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
புகையிரதில் பயணம் செய்து கொண்டிருந்த போது மரக்கிளை ஒன்று தலையில் மோதியதில் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
புதரில் விழுந்ததால் சீன யுவதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





