
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி அருகே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி இந்த அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப் பில் தெரிவித்தவை வருமாறு, -கொக்குத்தொடுவாய் புதைகுழி விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எதிராகவே காணாமல் போனோர் தொடர்பான பணிமனை (ஒ. எம்.பி.) அதிகாரிகள் நடந்து கொண்டனர். அவர்களின் செயல்பாடுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்துவதாகவே அமைந்தன. அத்துடன், அரசாங்கத்தை காப்பாற்றும் வகையில் ஓ.எம்.பி. அதிகாரிகள் செயல்பட்டனர்.
"கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்பட்டமை எமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இதனை சூழ இன்னமும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. எனவே, இவற்றைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
