வவுனியா குளத்தின் வான்பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால், மக்கள் பிடித்துச் செல்கின்றனர்.
7 months ago



வவுனியா குளத்தின் வான்பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனைப் போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக பல குளங்கள் வான் பாய்ந்து வருகின்றன.
அதில் வவுனியா நகரை அண்டியுள்ள பிரதான குளமான வவுனியா குளமும் வான் பாய்ந்து வருகின்றது.
குறித்த வான் பாயும் நீருடன் குளத்து மீன்களும் பெருமளவில் வருவதால் நுளம்பு வலை, மீன் வலை, துணி, வேட்டி என்பவற்றைக் கொண்டு வான்பாய்வதைப் பார்க்க வரும் மக்களும் மீன்களை போட்டி போட்டுப் பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.
இதன்பேது சிலாப்பியா, யப்பான், விரால், கெளிறு போன்ற பெருமளவான மீன்கள் பிடிக்கப்படுவதுடன், அதனைப் பிடித்துச் செல்பவர்கள் மகிழ்ச்சியில் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
