
கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன மூன்று இளம் வியாபார முதலீட்டாளர்களுக்கு வியாபாரத் சான்றிதழ்கள் வழங்கி வைத்தார்.
அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தார்.
விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, விவசாயம், போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு வட மாகாணத்திற்கான பல திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளது.
அபிவிருத்தி குழு கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், அங்கையன் இராமநாதன், சிவஞானம் ஸ்ரீதரன், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரன், கிளிநொச்சி மாவட்டத்தின் இராணுவ உயர் அதிகாரிகள் விமானப்படை உயரதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச திணைக்களத்தின் மாகாண மட்ட உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
