யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்று போராட்டம் முன்னெடுப்பு
1 month ago






யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்று (10) 2ஆம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் , கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்,
தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி நேற்று (09) மாலை முதல் , காணி உரிமையாளர்கள் , மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விகாரைக்கு தெற்கில் இருந்து பெருமளவான சிங்கள மக்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
