இலங்கையில் மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2 இற்கும் அதிகமான வாகனங்கள் காணாமல்போயுள்ளன

1 year ago



இலங்கையில் மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய நாட்களில் காணாமல்போயுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காணாமல்போன வாகனங்களில் அதி சொகுசு வாகனங்கள் மற்றும் ஜீப் வண்டிகளும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகின்றது.

மாகாண சபை அமைச்சுக்கள், நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் அவர்களுடைய உறவினர்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மத்திய மாகாண சபைக்குச் சொந்தமான சுமார் 31 வெவ்வேறு வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தணிக்கைக்கு வெளியிடப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

அண்மைய பதிவுகள்