கோடீஸ்வர வர்த்தகர்கள் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஆதரவு வழங்குவது 70 வீதத்தால் வீழ்ச்சி.-- பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு

கோடீஸ்வர வர்த்தகர்கள் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஆதரவு வழங்குவது 70 வீதத்தால் வீழ்ச்சி.-- பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் பலன்களை எதிர்ப்பார்க்க முடியாது என்பதால் சில மனக் கசிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களை மையமாகக் கொண்டு கோடீஸ்வர வர்த்தகர்கள் உள்ளிட்ட பிரபுக்கள் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஆதரவு வழங்குவது 70 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
அநேகமான வேட்பாளர்களுக்கு பிரச்சார நடவடிக்கைகளில் மந்தமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளமைக்கான முக்கிய காரணம் இதுவே எனவும் வெளி நாடுகளில் உள்ள பிரபுக்களும், வர்த்தகர்களும் கூட தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கு உதவும் மனநிலையில் இல்லை எனவும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பிரச்சார விளம்பரங்களுக்காக பணம் செலவிடுவதும் இரண்டு மடங்கால் குறைவடைந்துள்ளதாக கூறும் பவ்ரல் அமைப்பு, அநேகமான வேட்பாளர்கள் தங்களது பிரசாரங்களுக்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதைக் காணக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலுக்குரிய செலவு வரம்புகள் விதிக்கப்படுவதும், விளம்பரங்களுக்கு பணம் செலவழிப்பது குறைவதற்கு மற்றொரு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
