மெலிஞ்சிமுனையில் அமைக்கப்படும் கடலட்டைப் பண்ணையால் பாதிப்பு! பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளிப்பு.
1 year ago


கடலட்டைப் பண்ணையால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து தீவக மீனவர்களால் ஊர்காவற்றுறை பிரதேச செய லாளருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
சட்ட விரோதமாக மெலிஞ்சிமுனைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கடலட்டை பண்ணைகளால் தமக்கு தொழில் பாதிப்பு ஏற்படுவதாக இவ்விடயம் தொடர்பாக வேலணை அம்பிகை நகர் கடற்றொழிலாளர் சங்கம், மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் சங்கம், தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கம், சின்னமடு கடற்றொழிலாளர் சங்கம் போன்ற சங்கங்கள் ஊர்கா வற்றுறை பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை வழங்கியுள்ளன.
இதனால் வாழ்வாதார தொழில் அழிக்கப்படுகிறது. கடற்றொழிலுக்கு செல்லும் பாதைகள் கடல் அட்டைப் பண்ணையால் மறைத்து அடைக் கப்படுவதாலும் சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்கள் தான் பாதிப்படைகின்றோம். எனவே இந்த கடல் அட்டை பண்ணையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
