
கொங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற மோதலால் முன்செஸ்க் நகரிலுள்ள சிறைச்சாலையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறி வைத்து எம் - 23 என்ற கிளர்ச்சிக் குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
எனவே, அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.
இதற்கிடையே கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இதில், ஐ. நாவின் அமைதிப் படையினர் உட்பட 13 பேர் பலியாகினர்.
இதன் தொடர்ச்சியாக முன் செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
அப்போது சிறைக் காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது.
இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த கைதிகள் அனைவரும் தப்பியோட்டம் பிடித்தனர்.
இதில் சுமார் 6 ஆயிரம் கைதிகள் அங்கிருந்து தப்பியோடியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
