திருகோணமலை ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி பகுதியில் மாங்காய் ஆய்வதற்காக மரத்தில் ஏறியபோது மரத்தின் கிளை உடைந்ததில் மரத்தில் இருந்து சிறுமி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
ஆயிலிடி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான ரிஷ்வான் பாத்திமா ரிப்கத் வான்எல புகாரி நகர் வித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்று வந்துள்ளார்.
கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதையடுத்து சிறுமியின் சடலத்தைச் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும், சம்பவம் தொடர்பில் வான்எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
