கனடாவில் இயங்கி வரும் பால் பான உற்பத்தி நிறுவனம் ஒன்று பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது

கனடாவை மையமாக கொண்டு இயங்கி வரும் பால் பான உற்பத்தி நிறுவனம் ஒன்று திடீரென பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
சுமார் 150 பணியாளர்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டதனால் சில தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு குடியேறிகள் தொழில்களை இழக்க நேரிட்டுள்ளது.
நிறுவனத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு பணியாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஜொரிகி பிவரெஜேஸ் என்ற நிறுவனம் கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கி வருகின்றது.
இவ்வாறு இயங்கி வரும் நிறுவனத்தின் பணியாளர்களே பணி நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் பால் பான உற்பத்திகளை அருந்திய மூன்று பேர் உயிரிழந்ததுடன் பலர் நோய் வாய்ப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பிக்கரிங்கில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் உற்பத்தி சாலை மூடப்பட்டது.
இந்த நிறுவனம் பணியாளர் சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நிறுவன கடன்களுமாக சுமார் 200 மில்லியன் டொலர் செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தாம், திடீரென எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இங்கு பணிபுரியும் ராஜேந்திரம் ஆறுமுகம் என்பவர் தெரிவிக்கின்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
