இலங்கையில் ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பயணிகள் மீது கழிவுகளால் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணை.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பயணிகள் மீது கழிவுகளால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் வைத்து, வீதியில் சென்ற சிலரால் ரயிலுக்குள் கழிவுகள் அடங்கிய பொதியொன்று வீசப்பட்டுள்ளது.
அதன்போது, ரயிலில் பயணித்த வெளிநாட்டைச் சேர்ந்த தம்பதியினர் மீது, மேற்படி கழிவுப் பொதி வீழ்ந்துள்ளது.
பின்னர், ரயில் தலவாக்கலை நிலையத்தை அடைந்ததும், மேற்படி தம்பதியினர் ஆடைகளை மாற்றிக்கொண்டதுடன், ரயில் பெட்டியும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த ரயில் பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் நானுஓயா ரயில் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து இது தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
