இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை
1 year ago

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தைச் செலுத்தும் போது வீதி விதிகளை மீறிச் செயற்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண வீதிகளில் பயணிக்கும் வேகத்துக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வேகத்துக்கும் இடையே பாரியளவு வேறுபாடுகள் உள்ளன.
இதனால் சிறியளவான தவறுகளும் பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித் துள்ளார்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





