யாழ்.நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தமிழரசு தலைவர் உட்பட இருவர் மீது வழக்கு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், பதில் செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்.நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் செயலாளர் ப. சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதன்போது, வழக்கை தொடர்ந்துள்ள மார்க்கண்டு நடராசா முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன-
1 முதல் 3 வரையான எதிராளிகள் 27.01.2024 இற்குப் பின்னராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற் குழுவை கூட்டியமையும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்புக்கு முரணானவை என்ற வகையில் வெற்றும் வெறி தானவையும் என்ற கட்டளைக்கும் தீர்ப்புக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், 1ஆம் மற்றும் 2ஆம் எதிராளிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் என்ற அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு என்ற பெயரில் எவ்வித கூட்டங்களினையும் கூட்டக்கூடாது என்ற இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 1ஆம் எதிராளி இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற கோதாவில் செயற்படக்கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2ஆம் எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற கோதாவில் செயற்படக் கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவினை பிறப்பிக்குமாறும் வழக்காளியின் சார்பில் வேண்டுதல் முன்வைக்கப்பட்டுள்ளது.
வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.டினேஷ் மன்றில் முன்னிலையானார்.
இந்த வழக்கின் அடுத்த தவணை நவம்பர் 18 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
