ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலை வெளியிட மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்து.
10 months ago

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலை இலங்கை அரசாங்கம் வெளியிட மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் - என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதிலேயே மேற்குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கான தேசிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். தமிழகத் தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண் டும் என்றும் தீர்மானங்கள் வலி யுறுத்தப்பட்டன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
