கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டம்

கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில், அவை தற்காலிக தங்குமிடமாகவும், மொழிப் பயிற்சி மற்றும் பணி உதவி ஆலோசனை மையமாகவும் செயல்பட இருக்கின்றன.
இந்த தங்குமிடங்கள், அகதிகள் சில வாரங்கள் தங்குவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.
பின் அவர்கள் பொருத்தமான இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.
இப்படி அகதிகளுக்காக அரசு தற்காலிக தங்குமிடங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ள விடயம், சம்பந்தப்பட்ட பகுதியில் அக்கம் பக்கத்தில் வாழும் கனேடியர்களுக்கு உருவாக்கியுள்ளது.
கோபத்தை சொல்லப்போனால், உள்ளூர் மக்களுடைய எதிர்ப்பு காரணமாக, Ottawa நகரத்தில் அகதிகளுக்காக கட்ட திட்டமிடப்பட்டிருந்த முதல் தற்காலிக தங்குமிடம் ரத்து செய்யப்பட்டே விட்டது.
ஆகவே, அதற்கு பதிலாக தற்போது வேறு இரண்டு இடங்களில் தற்காலிக தங்குமிடங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
