
யாழ். பதில் அரசாங்க அதிபருடன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இன்று சந்திப்பு
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனை இன்று (08.10.2024) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் தற்போதைய வேட்புமனு கையேற்றல் தொடர்பாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளார் எஸ். அச்சுதன் கலந்து கொண்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
