அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலம்.-- நீதிமன்றம் உத்தரவு

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச் சர்களான டிரான் அலஸ், மகிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷன் ரணசிங்க, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்கு மூலங்களைப் பெறுவது அவசியம் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, இந்த விடயம் தொடர்பில் மாளிகாகந்தை நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியதையடுத்து, அதற்கு அனுமதியளித்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
