சர்வதேச தினமான இன்று (12) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுப்பு
7 months ago










இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான இன்று (12) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
'உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமை உடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்' எனும் தொனிப் பொருளில் வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வைத்தியசாலை சுற்று வட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தை அடைந்தது.ஏனைய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.
ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள், “நம்பிக்கை மனதில் உண்டு நம்பிக்கை கொடுங்கள், தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு, திறமைக்கு இயலாதமைகள் அல்ல போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த நிகழ்வை வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் ஓஹான் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
