முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,தனது இல்லத்தை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு கையளிப்பு
1 year ago

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு அமைய முன்னாள் அமைச்சர் இன்று தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த அமரவீர, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு குறித்த இல்லத்தை வழங்குவதற்கான முன்மொழிவை முன்னாள் அரசாங்கத்திடம் தாம் முன்வைத்திருந்ததாக தெரிவித்தார்.
முன்னாள் அரசாங்கத்தினால் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இடமாற்றத்திற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், இப்போது பாடசாலை குறித்த கட்டிடத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் கூறினார்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





