அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் வெளியிடப்படும் வசந்த சமரசிங்க தெரிவிப்பு.

1 year ago


ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 253 வாகனங்கள் முறைக்கேடாக பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் இவ்வாறு அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு வெளியிடப்படும் என்றும் இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

இந்த வாகனங்கள் தொடர்பாக நாம் தீர்க்கமான விசாரணைகளை நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் உரிய நடவடிக்கை எடுப்போம். யார் அரச சொத்துக்களை                 துஷ்பிரயோகம் செய்தது என்ற விவரங்களை நாம் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்துவோம்.

அரச அதிகாரிகள் இதற்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், இவர்களுக்குத்தான் இந்த வாகனங்களை யாருடையது, யார் பயன்படுத்தியது என்ற அனைத்து விடயங்களும் தெரியும்.

ஏன், இவர்கள் இந்த வாகனங்களை ஒப்படைத்துவிட்டு ஒழிய வேண்டும்? அதாவது, உரிமையில்லாதவற்றை பயன்படுத்தினால் தான் பயப்பட்டு, ஒழிந்து செல்ல வேண்டும்.

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 253 வாகனங்களை வெளியாட்கள் பயன்படுத்துகிறார்கள்.

இவைதான் இவ்வாறு நிறுத் தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம், வாகனங்களை பயன்படுத்திய நபர்களின் பெயர் விவரங்களை கோரியுள்ளோம்.

இந்த அனைத்து நபர்களுக்கு எதிராகவும் எதிர்க்காலத்தில் சட்டநடவடிக்கை மேற்கொள்வோம்.

ஜனாதிபதி இது தொடர்பாக உறுதியாகவுள்ளார். இது மக்களுடைய வாகனங்கள். இவை மீளவும் மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்-என்றார்.



அண்மைய பதிவுகள்