கோப்பாய் ஆசிரியர் கலாசா லையின் அலுவலக சேவை உத வியாளர் ஐயாத்துரை ரவிச்சந்தி ரனின் மணிவிழா.


கோப்பாய் ஆசிரியர் கலாசா லையின் அலுவலக சேவை உத வியாளர் ஐயாத்துரை ரவிச்சந்தி ரனின் மணிவிழா கடந்த 06 ஆம் திகதி கலாசாலையின் ரதிலக்ஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலை மையில் நடைபெற்றது.
கலாசாலையின் கற்பித்தல் சாரா அலுவலர்கள் இணைந்து இவ்வி ழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
கலாசாலையின் யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து மங்கள இசையுடன் வரவேற்பு ஊர்வலம் இடம்பெற்றது. தொடர்ந்து மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனை கற்பித்தல் சாரா அலுவலர் கணநாதன் சஜிவ் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் வாழத்துரைகள் இடம்பெற்றன. இதனை கலாசாலையின் பிரதி அதிபர்களான க. செந்தில்குமரன், த. கோபாலக்கிருஷ்ணன், உப அதிபர் சத்தியா ரஞ்ஜித், முன்னாள் அதிபர்களான வே. கா.கணப திப்பிள்ளை, வீ. கருணலிங்கம், தலைமை முகாமைத்துவ உத்தி யோகத்தர் நிசந்தி பிரதீபன், விரிவுரையாளர் சி.மனோகரன், விரிவுரையாளர் சந்திரிகா தர் மரட்ணம், ஆசிரிய மாணவி அஸ்மிலா பேகம் ஆகியோர் வழங்கினர். கவிஞர், விரிவுரை யாளர் வேல் நந்தகுமார் மேற்கொண்டார்.
தொடர்ந்து கலாதீபம் செப்ரெம்பர் மாதத்திற்கான இதழ் வெளியீடு செய்யப்பட்டது. இதில் ஐ. ரவிச்சந்திரன் பற்றிய வாழ்த்துச் செய்திகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. இதன் வெளியீட்டுரையை கலாதீபம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தர்ஷினி முத்துராஜா மேற் கொண்டார்.
ரவிச்சந்திரன் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஆவணப் படம் ஆசிரிய மாணவர்களால் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
