ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை, தாமதம் ஏற்பட்டால் மேலதிக பணியாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்து.

ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை, தாமதம் ஏற்பட்டால் மேலதிக பணியாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்து.
சகல வாக்கு எண்ணும் நிலையங்களிலும் ஒரேநேரத்தில் வாக்கு எண்ணிக்கை இடம்பெறுவதுடன், ஏதாவது வாக்கு எண்ணும் நிலையத்தில் தாமதம் ஏற்படுகின்றது என்றால் உடனடியாக மேலதிக பணியாளர்களை நியமித்து வாக்கு எண்ணிக்கையைத் துரிதமாகவும் சரியாகவும் முடிக்கவேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள தெரிவத்தாட்சி அலுவலர்கள், உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டது.
தேர்தல் நெருங்குவதால், மாவட்டச் செயலர் பதவிக்கான பணிகளை விட தெரிவத்தாட்சி அலுவலர் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார்.
வாக்கு எண்ணப்படவேண்டிய சூழல் ஏற்படலாம் என்பதால் முதல்சுற்று வாக்கு எண்ணிக்கை சகல வாக்கெண்ணும் நிலையங்களிலும் ஒரே நேரத்தில் நடந்து முடியவேண்டும்.
ஏனெனில் முதல் சுற்று நிறைவடைந்தால் மாத்திரமே இரண்டாம் சுற்றுக்குரிய முதலிரண்டு வேட்பாளர்கள் யார் என்பது தெரியவரும்.
ஏதாவது ஒரு வாக்கெண்ணும் நிலையத்தின் முடிவு தாமதமானாலும் ஏனைய வாக்கெண்ணும் நிலையங்களும் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
எனவே சகல வாக்கெண்ணும் நிலையங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடப்பதை தெரிவத்தாட்சி அலுவலர்கள், உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் உறு திப்படுத்த வேண்டும்.
அத்துடன் ஏதாவது வாக்கு எண்ணும் நிலையத்தில் தாமதம் ஏற்படுவதாக உணர்ந்தால் உடனடியாக மேலதிகப் பணியாளர்களை நியமித்து வாக்கு எண்ணிக்கை விரைவுபடுத்த வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் அரசியல் தரப்புகளால் ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் உடனடியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக் கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
