"மொஸ்கோவில் வாழ முடியாது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும்.-- ஜனாதிபதி பஷார் அல்ஆசாத்தின் மனைவி அஸ்மா அல்ஆசாத் கோரியுள்ளார்.

"மொஸ்கோவில் வாழ முடியாது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும். லண்டன் செல்ல சிறப்பு அனுமதி வேண்டும்" என்று சிரியாவிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி பஷார் அல்ஆசாத்தின் மனைவி அஸ்மா அல்ஆசாத் கோரியுள்ளார்.
ரஷ்ய நீதிமன்றத்தில் அவர் இது தொடர்பில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அரபு மற்றும் துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சிரியாவில் ஜனாதிபதியாக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு புரட்சி வெடித்தது.
ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்றது.
இதில் சுமார் 5 இலட்சம் பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 27ஆம் திகதி சிரியா இராணுவத்துக்கு எதிராக மிகப்பெரிய போரை துருக்கி ஆதரவு பெற்ற எச். டி. எஸ். கிளர்ச்சிப் படை தொடங்கியது.
அதேநேரம், ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தராததால் ஆசாத் தலைமையிலான சிரியா இராணுவம் பின்னடைவை சந்தித்தது.
இதனால், முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள், தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8ஆம் திகதி கைப்பற்றினர்.
இதையடுத்து, ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார். அவர் செல்வதற்கு முன்னதாகவே அவரது குடும்பத்தினர் அங்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் மனைவி விவாகரத்து கோரியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
