உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான உத்தேச சட்ட வரைவுக்கான ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம், உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான உத்தேச ஆணையம் என்பன வடக்கு - கிழக்கில் மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வகையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான விளக்கத்தை வழங்கவும் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவதற்கான கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நான்கு அமர்வுகளாக நடைபெற்றது.
இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடக்கால செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
1983 - 2009 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்றவை என்று கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான உண்மையை கண்டறிய பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படும் ஒரு சுயாதீனமான நிறுவனமாக உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தேச ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் முறையாக தகவல்களைத் திரட்டல், வன்முறைகளின் போது நடந்த விடயங்களை அறிக்கையிடல், கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க பரிந்துரை வழங்குதல் மற்றும் மோதலுக்கு பிந்தைய இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாக பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இவற்றில் ஒரு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அடுத்த கலந்துரையாடல் இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
மூன்றாவது கலந்துரையாடல் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
நான்காவது கலந்துரையாடல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், முன்னாள் போராளிகள், அங்கவீனமுற்றோர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இங்கு, நாட்டில் தேசிய நல்லிணக்கத்துக்கான உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் தற்போதைய வேலைத்திட்டங்கள் குறித்தும் இந்த சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேச சட்டமூலம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
