டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்த நிலையில், அடுத்த முதல்வராக அதிஷியின் பெயர் முன்மொழிவு.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பதவியை இராஜினாமா செய்த நிலையில், அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயர் முன்மொழி யப்பட்டுள்ளது.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி திஹார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால் கடந்த 13ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.
இதில் உரையாற்றிய கெஜ்ரிவால் “இன்னும் இரண்டு நாட்களில் முதல்வர் பதவியை இராஜினாமா செய்வேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் பதவியில் அமர்வேன்” -என்றார்.
இதன்படி நேற்றுச் செவ்வாய்க்கிழமை கெஜ்ரிவால் பதவியை இராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் எம். எல்.ஏக்களுடன் நடந்த அவசர கூட்டத்தில், அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார்.
இதற்கு அனைவரும் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேர வைத் தலைவராக அதிஷி தெரிவு செய்யப்பட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
