நீதி அமைச்சராக அலி சப்ரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம்

1 year ago


நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று திங்கட்கிழமை (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜினாமா செய்ததை அடுத்து ஜனாதிபதியின் கீழ் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுக்களை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நீதி அமைச்சராக அலி சப்ரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.