
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி வட மாகாண ஆளுநராக யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண ஆளுநராக பேராதனைப் பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மாகாண ஆளுநராக முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநராக திஸ்ஸ வர்ணசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மத்திய ஆளுநராக திஸ்ஸ குமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
