இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு வழங்கிய அனுமதி இரத்து.

1 year ago


மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மைக் காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்