மாவீரர் நாள் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கோட்டை நீதிமன்றில் முன்னிலையான கெலும் ஹர்ஷனுக்கு பிணை
7 months ago

இலங்கையில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெலும் ஹர்ஷன என்ற நபருக்கு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது தொடர்பான குற்றச்சாட்டு காணப்படவில்லை என்பதால் சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
கடந்த 30ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 35 மற்றும் 45 வயதுடைய மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
