ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ், தமிழ் அரசுக் கட்சியில் போட்டி என்று சுவரொட்டிகள்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ், இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என்று குழப்பம் ஏற்படும் விதமாக யாழ்ப்பாணத்தில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக சசிகலா ராவிராஜின் தொகுதியான சாவகச்சேரியில் நேற்றைய தினம் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அவருக்கு ஆதரவான வாக்குகளை திசைதிருப்பும் நோக்குடனும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான அவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டமையால் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
