யாழ்.வருகை தந்த ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்



யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்கவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த வேளை, வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்துக்கு அருகில் தமக்கு வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அமைதியாகப் போராட முடியும் எனவும், போராட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்த மன்று, தடை கோரிய மனுவை நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
